Friday, April 08, 2011


நித்திரை முறிக்கும் இளங்காலை பொழுது,
சீரான சூரிய ஒளி என் இமைகளை தழுவ,
எண்ண அலைகள் எழுந்தோடின உத்திரத்தை பார்த்தபடி
உறக்கத்திலிருந்து விழித்து, எண்ணத்தில் ஓர் பயணம்...

ஏன் இந்த தயக்கம்? எதனால் இந்த தடுமாற்றம் ?
எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளும் மனமின்மையா ?
இக்கட்டான சந்தர்பங்களை  கைய்யாளும் அச்சமா ?
முள் பாதையை பூக்களால்  நிரப்பும் வேலை பளுவா ?

நான் நினைப்பதை போல் நடக்க தடை விதிப்பது யார்?
சுற்றமா ? பெற்றோரா ? சந்தர்பங்களா ? நண்பர்களா?
சற்றே என் ஜன்னல் கண்ணாடிகளை  திரும்பிப்பர்கிறேன்..
என் பிம்பத்தை காட்டி மெய் உணர்த்தியது...வேலி அமைத்தது நானே என்று..

உலகை ஆதவன் துயிலெழுப்பும் நேரம்...
என் சிந்தை மனதிற்கு போதனை புரியும் சமயம்...
'மனமே! ஈன காரணங்களுக்காக என்னை தவிர்க்கதே...
மடமை தவிர்த்து உறுதி கொள்!'

'கண்ணனை காக்க முழு மூச்சாய் புறப்பட்ட வசுதேவனுக்கு,
சீறி பாயும்  யமுனை வழி வகுத்தது போல...
எண்ணியதை நினைவாக்க திண்ணமாய் அடி எடுத்தால்...
பட்ட மரங்களும் துளிர்த்து நிழல் கொடுக்கும்...'

'அமைக்கப்பட்ட குடை நிழலில் வழ்வதேளிது...
எனினும், குடை அமைக்கும் ஆற்றல் பெற்றால், அதற்கு நிகர் ஏது?!
ஆதவன் சீற்றத்தையும், மாரியின்  முழு தோற்றத்தையும் எதிர்கொள்ள பார்...
உச்சியை தொட இச்சகம் உன்னை ஏற்றும்'

விழித்துக்கொண்ட மனம்...
"முடிவு என் கையில்..நேரம் என் கைப்பிடியில்...
இன்பமும் துன்பமும் என் சிந்தையில்"
என்று சலனம் அகற்ற துடிப்போடு எழுந்தது!!!