Sunday, August 19, 2007


மென்மலர் பாதம்...

பூ போன்ற ஸ்பரிசம்...

பால் வாசம்...

உலகத்தையே புரிய வைக்கும் இனம் புரியாத சிணுங்கல்கள்...

தள்ளாடும் பிஞ்சு நடை...

தன் உலகத்துக்குள் நம்மை ஈர்க்கும் குழந்தையின் அற்புதங்கள்...


விதியின் விந்தை!எப்படி ஏற்பட்டது?! எண்ணிப் பார்க்கிறேன்..

மெத்தனமாக அமைந்த ஒன்று இப்போது அத்தனை திண்ணமாய்...

நிரந்தரமாய்...உறுதியை...

பயம் ஒரு பக்கம்...அதனைக் காட்டிலும் மேலாக மனதில் இதம்...

குழந்தையைப் போல் துள்ளும் சிந்தையின் ஒரு பாதி..அதை பக்குவப்படுத்த துடிக்கும் மற்றொரு பாதி..
காரணம் எதுவோ?!

சேர்க்கையின் சந்தோஷமா...பிரிவின் வலியா???!!

ஹ்ம்ம்...விளக்கங்கள் விடுகதையாய்...

ஒப்பில்லாத வலியில் அளவில்லாத இன்பம் இருப்பதை உணர்ந்தேன்...

உயிரை பிசையும் வேதனையில் உலகில் உள்ள அனைத்து சுகங்களும் இருக்க முடியும் என்பதை புரிந்தேன்...

என் தாயவள் அத்தனை பூரிப்போடு என் ஜனனத்தை விவரித்தபோது...

Friday, August 17, 2007


அத்தனையும் அழகாய்...

சகலமும் மனதிற்கு இனியதாய்...

நெருக்கமாய்...

உருக்கமாய்...

இதமாய்...

அந்த அற்புத உலகத்தில்...


அதோ அந்த கற்பனை என்ற விரிந்த பிரபஞ்சத்தில்தான்... :)

Sunday, June 17, 2007


பூமியின் மீது மேகம் கொண்ட காதலை தடுக்கும் காற்று மீது மேகம் கொண்ட கோபமோ....
இந்த ஒளி கீற்றும்...பேரிடியும்....

நிறத்தால் வேறுபட்ட மலர்களின் தொடுப்பு...குணத்தால் வேறுபட்ட நிகழ்வுகளின் தொகுப்பு... நீளமும் அகலமும் சிறியதும் என வேறுபட்ட மலர்கள்...சோகம் வெறுப்பு சந்தோஷம் என மாறுபட்ட உணர்வுகள்... எனினும் இவ்விரண்டும் அழகாய் திகழ தவறவில்லை... மணம் வீச மறுக்கவில்லை....

மனதில் மட்டுமே நினைத்தது நரம்பெங்கும் மின்சாரமாய் பாய்வது என்ன விந்தையோ....
என்ன மின்னல் தாக்கியதோ....இப்படி ஒரு பேரிடி ஊனுக்குள்..
உயிர் உருகி ஊனுக்குள் புயலாவது என்ன அதிசயமோ...

காரணம் அறியாத கண்ணோர நீர்த்துளிகள்...
கண் உறவாடல்களை தவிர்த்து உரையாடல்கள்...
காரணம் அறியா சிலிர்ப்பு..
பிதற்றல்களால் தோன்றும் பெருமகிழ்ச்சி...
இவை ஏன் என்று தெரியாமல் உள்ளூர ஓர் நெகிழ்ச்சி... :)