Sunday, June 17, 2007


பூமியின் மீது மேகம் கொண்ட காதலை தடுக்கும் காற்று மீது மேகம் கொண்ட கோபமோ....
இந்த ஒளி கீற்றும்...பேரிடியும்....

நிறத்தால் வேறுபட்ட மலர்களின் தொடுப்பு...குணத்தால் வேறுபட்ட நிகழ்வுகளின் தொகுப்பு... நீளமும் அகலமும் சிறியதும் என வேறுபட்ட மலர்கள்...சோகம் வெறுப்பு சந்தோஷம் என மாறுபட்ட உணர்வுகள்... எனினும் இவ்விரண்டும் அழகாய் திகழ தவறவில்லை... மணம் வீச மறுக்கவில்லை....

மனதில் மட்டுமே நினைத்தது நரம்பெங்கும் மின்சாரமாய் பாய்வது என்ன விந்தையோ....
என்ன மின்னல் தாக்கியதோ....இப்படி ஒரு பேரிடி ஊனுக்குள்..
உயிர் உருகி ஊனுக்குள் புயலாவது என்ன அதிசயமோ...

காரணம் அறியாத கண்ணோர நீர்த்துளிகள்...
கண் உறவாடல்களை தவிர்த்து உரையாடல்கள்...
காரணம் அறியா சிலிர்ப்பு..
பிதற்றல்களால் தோன்றும் பெருமகிழ்ச்சி...
இவை ஏன் என்று தெரியாமல் உள்ளூர ஓர் நெகிழ்ச்சி... :)

Tuesday, November 14, 2006


உறவுக்களிப்பின் உச்சியில் மரணம் வலி....

எதிர்ப்பார்ப்பின் உச்சியில் ஏமாற்றம் வலி....

உண்மையான அன்பின் உச்சியில் நடிப்பு வலி...

காதலின் உச்சியில் துரோகம் வலி....

இவ்வனைத்தையும் கடந்து வெற்றி கண்டவனைத்தான் உச்சியை அடைந்தவன் என்கிறோமோ.......?

Monday, October 23, 2006


இன்று நிலவைக் கண்டாயா ... வெள்ளித் தட்டின் ஒலி...
சூரியனின் பிரகாசம்...
பாலின் வெண்மை...
அழகின் இனிமை...
அடடே என்று நினைத்த பொது...

கிரகணம் என்றார்கள் வீட்டில்!!!