Monday, January 02, 2012


குளத்து  நீச்சல் - அமைதி , அச்சமின்மை,சுகமான அனுபவம் , சிறு மீன்களோடு  போட்டி, பெரிதும் மாற்றமில்லா  சூழல்...

கடல் நீச்சல் - பேரலைகள்,சிலிர்ப்பு , கிளர்ச்சியான அனுபவம் ,திமிங்கலன்களோடு போட்டி, வினாடிக்கு விநாடி மாறும் சூழல்...

இதோ அலைகளின் ஆர்பரிப்பில் என்னுடைய  பயணம் :) :)

Friday, April 08, 2011


நித்திரை முறிக்கும் இளங்காலை பொழுது,
சீரான சூரிய ஒளி என் இமைகளை தழுவ,
எண்ண அலைகள் எழுந்தோடின உத்திரத்தை பார்த்தபடி
உறக்கத்திலிருந்து விழித்து, எண்ணத்தில் ஓர் பயணம்...

ஏன் இந்த தயக்கம்? எதனால் இந்த தடுமாற்றம் ?
எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளும் மனமின்மையா ?
இக்கட்டான சந்தர்பங்களை  கைய்யாளும் அச்சமா ?
முள் பாதையை பூக்களால்  நிரப்பும் வேலை பளுவா ?

நான் நினைப்பதை போல் நடக்க தடை விதிப்பது யார்?
சுற்றமா ? பெற்றோரா ? சந்தர்பங்களா ? நண்பர்களா?
சற்றே என் ஜன்னல் கண்ணாடிகளை  திரும்பிப்பர்கிறேன்..
என் பிம்பத்தை காட்டி மெய் உணர்த்தியது...வேலி அமைத்தது நானே என்று..

உலகை ஆதவன் துயிலெழுப்பும் நேரம்...
என் சிந்தை மனதிற்கு போதனை புரியும் சமயம்...
'மனமே! ஈன காரணங்களுக்காக என்னை தவிர்க்கதே...
மடமை தவிர்த்து உறுதி கொள்!'

'கண்ணனை காக்க முழு மூச்சாய் புறப்பட்ட வசுதேவனுக்கு,
சீறி பாயும்  யமுனை வழி வகுத்தது போல...
எண்ணியதை நினைவாக்க திண்ணமாய் அடி எடுத்தால்...
பட்ட மரங்களும் துளிர்த்து நிழல் கொடுக்கும்...'

'அமைக்கப்பட்ட குடை நிழலில் வழ்வதேளிது...
எனினும், குடை அமைக்கும் ஆற்றல் பெற்றால், அதற்கு நிகர் ஏது?!
ஆதவன் சீற்றத்தையும், மாரியின்  முழு தோற்றத்தையும் எதிர்கொள்ள பார்...
உச்சியை தொட இச்சகம் உன்னை ஏற்றும்'

விழித்துக்கொண்ட மனம்...
"முடிவு என் கையில்..நேரம் என் கைப்பிடியில்...
இன்பமும் துன்பமும் என் சிந்தையில்"
என்று சலனம் அகற்ற துடிப்போடு எழுந்தது!!! 

Wednesday, April 28, 2010



வார்த்தைகள் கவிதையாய் மலரும் தமிழமுதம்...
ஒலிகள் இசையாய் மாறுவது அற்புதம்...

இவ்விரண்டும் புணர்ந்து பாடல்களாவது ஏகாந்தம்...
அவை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைவது பெரும் சுகம்...

இப்பாடல்கள் நம் எண்ணங்களோடு இணையும் தருணம்...
உலகின் அளவற்ற இன்பம் யாவும் சொற்பம்!!!

Thursday, January 21, 2010


அளவற்ற மகிழ்ச்சி - கலங்கிய நேரத்தில், நெருங்கிய உறவின் எதிர்பாராத ஆறுதலின் விளைவு



கண்ணில் நீர் துளிர்க்கும் நெகிழ்ச்சி - நெருங்கிய பொழுதில், உற்ற உறவின் எதிர்பாராத உருக்கங்களின் விளைவு


ஆறா துயர் - நந்தவனமான வாழ்வில், மனதில் உறையும் உறவின் எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் விளைவு

தீரா காயமும் கோபமும் - நம்பகமான வேளையில், எதிர்பாராத ஏமாற்றத்தின் விளைவு


மீள முடியா அதிர்ச்சி - அமைதியான நிமிடங்களில், எதிர்பாராத நிகழ்வுகளின் விளைவு


எதிர்பாராத கணத்தில் நிகழும் யாவும் விளைவிக்கும் மிகுதியான உணர்வுகள்!!!



Tuesday, December 22, 2009

மூலவனின் மாயம், இங்கு இயற்கையின் இயக்கம்...

இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...



அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...

விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...



நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...

பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...

Tuesday, November 10, 2009



அன்னையுடன் நீண்ட உரையாடல்கள்,
தந்தையுடன் பகிர்தல்கள்,
தம்பியுடன் மூன்றாம் உலகப் போர்கள்,
மனதிற்கு நெருங்கிய உறவுகள்.

என் இரு சக்கர வாகனத்தில் வெகு தூர பயணம்,
மின்சார இரயிலில் சிந்தையை கட்டவிழ்த்த பிரயாணம்,
வசை கேட்டினும் அசைவில்லாத நீண்ட உறக்கம்,
மிதமான வாழ்க்கை நந்தவனம்.

வானொலியில் அயராத இசை இன்பம்,
ஒளி வீசும் ஆதவனால் நகரே பிரகாசம்
கிட்டும் தூரத்தில் அனைத்து பொருட்களும் உன் வசம்,
அத்தனை மனம் நிறைக்கும் என் சென்னை வாசம்...!!!


Friday, August 28, 2009


கதவைத் தட்டிய வாய்ப்பாகிய விருந்தாளி, திறப்பதற்கு முன் சென்றாரோ...!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!