
இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...
அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...
விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...
நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...
பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...
அன்னையுடன் நீண்ட உரையாடல்கள்,
தந்தையுடன் பகிர்தல்கள்,
தம்பியுடன் மூன்றாம் உலகப் போர்கள்,
மனதிற்கு நெருங்கிய உறவுகள்.
என் இரு சக்கர வாகனத்தில் வெகு தூர பயணம்,
மின்சார இரயிலில் சிந்தையை கட்டவிழ்த்த பிரயாணம்,
வசை கேட்டினும் அசைவில்லாத நீண்ட உறக்கம்,
மிதமான வாழ்க்கை நந்தவனம்.
வானொலியில் அயராத இசை இன்பம்,
ஒளி வீசும் ஆதவனால் நகரே பிரகாசம்
கிட்டும் தூரத்தில் அனைத்து பொருட்களும் உன் வசம்,
அத்தனை மனம் நிறைக்கும் என் சென்னை வாசம்...!!!