Wednesday, April 28, 2010



வார்த்தைகள் கவிதையாய் மலரும் தமிழமுதம்...
ஒலிகள் இசையாய் மாறுவது அற்புதம்...

இவ்விரண்டும் புணர்ந்து பாடல்களாவது ஏகாந்தம்...
அவை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைவது பெரும் சுகம்...

இப்பாடல்கள் நம் எண்ணங்களோடு இணையும் தருணம்...
உலகின் அளவற்ற இன்பம் யாவும் சொற்பம்!!!

Thursday, January 21, 2010


அளவற்ற மகிழ்ச்சி - கலங்கிய நேரத்தில், நெருங்கிய உறவின் எதிர்பாராத ஆறுதலின் விளைவு



கண்ணில் நீர் துளிர்க்கும் நெகிழ்ச்சி - நெருங்கிய பொழுதில், உற்ற உறவின் எதிர்பாராத உருக்கங்களின் விளைவு


ஆறா துயர் - நந்தவனமான வாழ்வில், மனதில் உறையும் உறவின் எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் விளைவு

தீரா காயமும் கோபமும் - நம்பகமான வேளையில், எதிர்பாராத ஏமாற்றத்தின் விளைவு


மீள முடியா அதிர்ச்சி - அமைதியான நிமிடங்களில், எதிர்பாராத நிகழ்வுகளின் விளைவு


எதிர்பாராத கணத்தில் நிகழும் யாவும் விளைவிக்கும் மிகுதியான உணர்வுகள்!!!



Tuesday, December 22, 2009

மூலவனின் மாயம், இங்கு இயற்கையின் இயக்கம்...

இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...



அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...

விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...



நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...

பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...

Tuesday, November 10, 2009



அன்னையுடன் நீண்ட உரையாடல்கள்,
தந்தையுடன் பகிர்தல்கள்,
தம்பியுடன் மூன்றாம் உலகப் போர்கள்,
மனதிற்கு நெருங்கிய உறவுகள்.

என் இரு சக்கர வாகனத்தில் வெகு தூர பயணம்,
மின்சார இரயிலில் சிந்தையை கட்டவிழ்த்த பிரயாணம்,
வசை கேட்டினும் அசைவில்லாத நீண்ட உறக்கம்,
மிதமான வாழ்க்கை நந்தவனம்.

வானொலியில் அயராத இசை இன்பம்,
ஒளி வீசும் ஆதவனால் நகரே பிரகாசம்
கிட்டும் தூரத்தில் அனைத்து பொருட்களும் உன் வசம்,
அத்தனை மனம் நிறைக்கும் என் சென்னை வாசம்...!!!


Friday, August 28, 2009


கதவைத் தட்டிய வாய்ப்பாகிய விருந்தாளி, திறப்பதற்கு முன் சென்றாரோ...!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!

Tuesday, June 09, 2009

குதூகலிப்பை குறைக்காதே...
கோபத்தை மறைக்காதே...
சோகத்தை சுருக்கதே...
மகிழ்ச்சியை மக்காதே...
தன்மையாய் பேசுவதால் மட்டும் உறவுகள் மேம்படுவதில்லை...
மனதில் நினைத்ததை சொல்வதால் நல் உறவுகளை நீ இழக்கப்போவதுமில்லை...
நீ நீயாய் இருப்பதில் என்றும் பெருமை கொள்...
பிறரை கவர்வதற்காக உன்னை மாற்றுவது போன்று சிறுமை ஏதும் இல்லை...!

Wednesday, January 02, 2008


எத்துணை கூட்டத்திலும் அத்துணை எளிதாக உன்னை கண்டறிகிறேன்...
கொடியவர் நடக்கும் பாதையில் உன் ஓரடியை தீண்ட கடினப்ப்டவில்லை....
இந்த வேளையில் ஏனோ...தேடிக்கொண்டிருக்கிறேன்....

தொலைத்து விட்ட என்னை...

என் கடிகாரங்களுக்கு ஒரு வேண்டுகோள்...
உன்னோடு உரையாடும் அந்த அற்புத மணிகள்....
உன்னோடு இருக்கும் அந்த நிகரற்ற நிமிடங்கள்...
உன் தீண்டலை உணரும் அந்த விந்தை வினாடிகள்...
இவற்றை மட்டும் காட்டு எனக்கு.....

Sunday, August 19, 2007


மென்மலர் பாதம்...

பூ போன்ற ஸ்பரிசம்...

பால் வாசம்...

உலகத்தையே புரிய வைக்கும் இனம் புரியாத சிணுங்கல்கள்...

தள்ளாடும் பிஞ்சு நடை...

தன் உலகத்துக்குள் நம்மை ஈர்க்கும் குழந்தையின் அற்புதங்கள்...


விதியின் விந்தை!எப்படி ஏற்பட்டது?! எண்ணிப் பார்க்கிறேன்..

மெத்தனமாக அமைந்த ஒன்று இப்போது அத்தனை திண்ணமாய்...

நிரந்தரமாய்...உறுதியை...

பயம் ஒரு பக்கம்...அதனைக் காட்டிலும் மேலாக மனதில் இதம்...

குழந்தையைப் போல் துள்ளும் சிந்தையின் ஒரு பாதி..அதை பக்குவப்படுத்த துடிக்கும் மற்றொரு பாதி..
காரணம் எதுவோ?!

சேர்க்கையின் சந்தோஷமா...பிரிவின் வலியா???!!

ஹ்ம்ம்...விளக்கங்கள் விடுகதையாய்...

ஒப்பில்லாத வலியில் அளவில்லாத இன்பம் இருப்பதை உணர்ந்தேன்...

உயிரை பிசையும் வேதனையில் உலகில் உள்ள அனைத்து சுகங்களும் இருக்க முடியும் என்பதை புரிந்தேன்...

என் தாயவள் அத்தனை பூரிப்போடு என் ஜனனத்தை விவரித்தபோது...

Friday, August 17, 2007


அத்தனையும் அழகாய்...

சகலமும் மனதிற்கு இனியதாய்...

நெருக்கமாய்...

உருக்கமாய்...

இதமாய்...

அந்த அற்புத உலகத்தில்...


அதோ அந்த கற்பனை என்ற விரிந்த பிரபஞ்சத்தில்தான்... :)

Sunday, June 17, 2007


பூமியின் மீது மேகம் கொண்ட காதலை தடுக்கும் காற்று மீது மேகம் கொண்ட கோபமோ....
இந்த ஒளி கீற்றும்...பேரிடியும்....

நிறத்தால் வேறுபட்ட மலர்களின் தொடுப்பு...குணத்தால் வேறுபட்ட நிகழ்வுகளின் தொகுப்பு... நீளமும் அகலமும் சிறியதும் என வேறுபட்ட மலர்கள்...சோகம் வெறுப்பு சந்தோஷம் என மாறுபட்ட உணர்வுகள்... எனினும் இவ்விரண்டும் அழகாய் திகழ தவறவில்லை... மணம் வீச மறுக்கவில்லை....

மனதில் மட்டுமே நினைத்தது நரம்பெங்கும் மின்சாரமாய் பாய்வது என்ன விந்தையோ....
என்ன மின்னல் தாக்கியதோ....இப்படி ஒரு பேரிடி ஊனுக்குள்..
உயிர் உருகி ஊனுக்குள் புயலாவது என்ன அதிசயமோ...

காரணம் அறியாத கண்ணோர நீர்த்துளிகள்...
கண் உறவாடல்களை தவிர்த்து உரையாடல்கள்...
காரணம் அறியா சிலிர்ப்பு..
பிதற்றல்களால் தோன்றும் பெருமகிழ்ச்சி...
இவை ஏன் என்று தெரியாமல் உள்ளூர ஓர் நெகிழ்ச்சி... :)

Tuesday, November 14, 2006


உறவுக்களிப்பின் உச்சியில் மரணம் வலி....

எதிர்ப்பார்ப்பின் உச்சியில் ஏமாற்றம் வலி....

உண்மையான அன்பின் உச்சியில் நடிப்பு வலி...

காதலின் உச்சியில் துரோகம் வலி....

இவ்வனைத்தையும் கடந்து வெற்றி கண்டவனைத்தான் உச்சியை அடைந்தவன் என்கிறோமோ.......?

Monday, October 23, 2006


இன்று நிலவைக் கண்டாயா ... வெள்ளித் தட்டின் ஒலி...
சூரியனின் பிரகாசம்...
பாலின் வெண்மை...
அழகின் இனிமை...
அடடே என்று நினைத்த பொது...

கிரகணம் என்றார்கள் வீட்டில்!!!